Wednesday 28 June 2017

Tracing the Calls



Adyar-Sangeetha Hotel
மே மாதம் வந்தால் ஒரு பறவையின் குரலை கேட்டுக்கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த வருடமும் அதே போல் குரல் காதில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு நாள் சாஸ்திரி பவன் சாலையில் செல்லும்பொழுது ஓசை கேட்டது ஆனால் ஓசை வந்த இடத்தை நோக்கி பார்க்க கூட முடியவில்லை அந்த அளவுக்கு வண்டிகள் சாலையில் அதிகம் ஓடியது. உடனே முடிவு செய்தேன் நகரத்தில் வேறு எங்கெல்லாம் இவற்றின் குரல்கள் கேட்க முடிகிறது மற்றும் அந்த பறவையை பார்க்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை குரலை நோக்கிச் செல்வோம், முடிந்தால் பறவையை அல்லது மரங்களை படம் பிடிப்போம் என்று வண்டியை சென்னை நகரம் முழுவதும் ஓட்டி வலம் வந்தேன். எந்த பறவை என்று சொல்லவில்லையே என்பீர்கள் வேறு யாரு நம்ம கறுப்பன் தான், அதாங்க குயில்.

காகத்தை திசை மாற்றி அதன் கூட்டில் முட்டை இடுவதே பெரும் சவாலாக வருடா வருடம்  குயில் செய்துவருகிறது. மனிதனுக்கும்-காகத்திற்கும் உள்ள வித்தியாசம், நம் குட்டி இவை இல்லை என்று தெரிந்த பிறகு காகங்கள் தன் கூட்டில் இருந்து குயில் குட்டியை  வருடா வருடம் வெளியே துரத்தும். இருந்தாலும் அடுத்த வருடம் குயிலின் முட்டையை போற்றி பாதுகாக்கம். நாம் அரசியில்வாதிகளிடம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வாக்குறுதிகளை நம்பி, தெரிந்தே ஏமாறுவது போல் காகங்கள்  வருடம் வருடம் தெரியாமல் ஏமார்ந்து கொண்டிருக்கும். நாம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை, காகங்கள் வருடம் ஒரு முறை ஏமாறும், வித்தியாசம் அவ்வளவுதான்.

Tuesday 20 June 2017

இயற்கையை அழித்தால் ?



(இயற்கையை அழித்தால் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை ஜூன் மாத பாவையர் மலர் இதழில் வெளிவந்துள்ளது.)

உலகில் உயிரினங்கள் தோன்றியபொழுது மனிதன் தோன்றவில்லை, டைனோசர்கள் வாழ்ந்த காலத்திலும் மனிதன் இல்லை. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ஸாக வருவேன் என்ற வசனத்திற்கு ஏற்ப மனிதன் லேட்டாக பூமியில் தோன்றினான். ஆனால் லேட்டஸ்ஸாக அனைத்து உயிரினங்களையும் தன் காலடியில் கொண்டுவந்துவிட்டான். இன்று மனிதன் நினைத்தால் ஒரே வாரத்தில் உலகில் உள்ள உயிரினங்களை அனைத்தும் கொன்றுவிட முடியும் அந்த அளவுக்கு சர்வ வல்லமை படைத்த நிலைக்கு உயர்ந்துவிட்டான். 

யானை ஊருக்குள் புகுந்தது, சிறுத்தை மனிதனை கொன்றது போன்ற செய்தியை நாம் அடிக்கடி பத்திரிக்கையில் படிப்போம். உடனே யானை மற்றும் சிறுத்தையை கொல்ல, விரட்ட முயற்சிப்போம். இவற்றை நேரடியாக பார்க்கும் பொழுது, சரி என்ற முடிவுக்கு வருவோம். ஆனால் அப்படி வருவதற்கு முன்பு நம் வீட்டுக்குள் நடக்கும் ஒரு நிகழ்வை பார்த்தபிறகு முடிவு செய்வோம்.

Thursday 8 June 2017

பறவை நோக்குதல்- 11: (Wetland Birds)




பறவைகளை அதிகமாக ஒரே இடத்தில் பார்ப்பதற்கு சிறந்த வழி நீர் நிலை அருகில் பார்க்க செல்வதே அதிகம் சுற்றி அலையை வேண்டியதில்லை. ஆரம்பத்தில் சிறுவர்களை பறவை பார்க்க அழைத்து செல்லும்பொழுது நீர் நிலை அருகில் அழைத்து சென்றால் மகிழ்வார்கள்.
நீர் புலப் பறவைகள் என்றால்?