Thursday 15 December 2016

வடுவூர் பறவைகள் சரணாலயம்




Entrance Without Name Board
வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு பெரும்பாலான மக்கள் செல்லவில்லை என்றாலும் அந்த சரணாலயத்தை பற்றி பரவலாக மக்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் அவற்றை தவிர நம் ஊருக்கு அருகில் பறவைகள் சரணாலயம் இருந்தாலும் யாருக்கும் தெரிவதில்லை என்பதை தஞ்சாவூர் பஸ் நிலையத்தில் வடுவூர் பறவைகள் சரணாலயம் என்று கேட்டால் ஒருத்தர் கோடியக்கரை சரணாலயமா என்றார், பஸ் நடத்துனர் அந்த ஏரியா என்கிறார், இன்னும் சிலபேருக்கு ஊரை தெரிந்து இருக்கிறது ஆனால் சரணாலயம் தெரியவில்லை.

வடுவூர் பறவைகள் சரணாலயம், “ப” வடிவத்தில் நம்மால் சென்று பார்க்கும் வகையில் உள்ளது.அவ்வளவு தொலைவு (தஞ்சாவூர் சென்று வடுவூர்) சென்றதிற்கு பலன் இருந்தது. ஏரியில் நீர் நிறைய இல்லை என்றாலும் நிறைய பறவைகளை பார்க்க முடிந்தது.

கழுத்து மிக நீளமாக, மஞ்சள் அலகுடன் பெரிய கொக்கை எனக்கு அருகில் நிறைய இந்த
சரனாலயத்திலேயே பார்த்தேன். அதன் அசைவுகளை சிறிது நேரத்திற்கு நின்று பார்த்து விட்டே மற்ற பறவைகளில் கவனம் செலுத்தினேன். அதே போல் நாமக்கோழி பள்ளிகரணையில் என்னும் அளவுக்கு பார்த்துள்ளேன் ஆனால் இங்கே அதிக அளவிவில் ஒரு கூட்டமாக இருந்தது.

சரணாலயத்தில் என்னை தவிர வேறு யாரும் இல்லை என்பது எதிர்பார்த்ததே. ஏரியில் நீர் இல்லாததால் உள்ளூர் மக்கள் தங்கள் மாடுகளை ஏரியிலே மேய்க்க விட்டு விடுகிறார்கள் அதில் சிலபேர் அங்கேய அமர்ந்தும் விடுகிறார்கள். வேடந்தாங்கலில் ஏரியை விட்டு வெகு தொலைவில் மாடுகள் மேய்வதை பார்க்க முடிந்தது.

Large Egrate
உள்ளூர் மனிதர்களின் நடமாட்டம் இருப்பதால் சரணாலயம் உயிர்ப்புடன் இருக்கிறது.ஆனால் மாடுகள் தான் பறவைகளின் இடங்களை எடுத்து கொண்டுள்ளது. நாம் நடந்து செல்வதற்கு அருமையான நடை பாதை அமைத்திருப்பது, ஆங்காங்கே அமர்வதற்கு பெஞ்ச் இருப்பது உண்மையில் தொலைவில் இருந்து செல்லும் நமக்கு பயன்தரும்.

Inside Way
இணையத்தில் பார்த்த பொழுது, சுற்றி பார்பதற்கு இலவசம் கேமராக்கு முப்பது ரூபாய் என்று இருந்தது ஆனால் அங்கு அதுபோல் எதுவும் இல்லை. அதுபோல் சரணாலயத்திற்கு பெயர் பலகையும் இல்லை. அருமையான நுழைவுவாயில் மட்டும் இருக்கிறது.

ஒரே ஒரு உள்ளான் தன் பின் புறத்தை ஆட்டி கொண்டே நீரில் அலகை நுழைப்பதும் எடுப்பதும் என்று தொடர்ந்து அதன் வேலையில் இருந்தது அருகில் நான் இருந்து கவனிப்பதை கூட பொருட்படுத்தவேயில்லை.


அங்கு இருந்தவர்கள் ஏரியில் நீர் இல்லாததால் பறவைகள் வரவில்லை என்று சொன்னார்கள் நாம் பார்பதற்கு இரண்டு கோபுரங்கள் உள்ளது ஒன்று மன்னார்குடி சாலையில் பூட்டி இருந்தது இரண்டாவது “ப” வடிவின் முடிவில் செல்லும்பொழுது அமைந்திருக்கிறது.
ரொம்ப அமைதியான சூழல், பச்சைகிளிகள் அங்கும் இங்கும் பறந்து சென்று கொண்டிருந்தது. புள்ளி புறா ஒன்று மரத்தில் இருப்பதை பார்க்க முடிந்தது.

பார்த்த பறவைகள்:
1.நத்தை குத்தி நாரை -Open Billed Stork
2.சாதாரண மீன் கொத்தி-Common Kingfisher
3.கருப்பு வெள்ளை மீன் கொத்தி-Pied kingfisher
4.வென்மார்பு மீன் கொத்தி-White Throated Kingfisher
5.பெரிய கொக்கு-Large Egret
6.சிறிய கொக்கு-Little Egret
7.உன்னி கொக்கு-Cattle Egret
8.நாமக்கோழி-Common Coot
9.நீலத் தாழைக் கோழி Purple Swamphen
10.மஞ்சள் மூக்கு நாரை-Painted Stork
Watch Tower in Tanjavur Main Road
11.நீலவால் இலைக் கோழி-Pheasant-tailed Jacana
12.புள்ளி வாத்து-Spot Billed Duck
13.சிழ்க்கைச் சிறகி-Lesser Whistling Duck
14.புள்ளிப்புறா-Spotted Dove
15.அரிவாள் மூக்கன்-White ibis
16.பச்சைக்கிளி-Rose Ringed Parakeet
17.செம்பருந்து-Brahminy Kite
18.குருட்டு கொக்கு-Pond Heron
19.செந்நாரை-Purple heron
20.சிறிய நீர் காகம்-Little Cormorant
21.வால் காக்கை-TreePie
22.வயல் நெட்டைக் காலி-Paddy field Pipit
23.கரிச்சான்-Black Drongo
23.சிகப்பு மூக்கு ஆட்காட்டி-Red Wattled Lapwing
24.ஊசிவால் வாத்து-Pintail
25.முக்குளிப்பான்-Little Grebe
26.மீசை ஆலா-Whiskered Tern

Lake Without Water2016
இன்னும் நிறைய பறவைகள் இருந்தது ஆனால் என்னால் இனம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு முறை பறவை நிபுணர்களுடன் பறவை நோக்க செல்லவேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன்.

உள்ளூர் மனிதர்கள் சரணாலயத்திற்குள் மாடுகளை ஓட்டி செல்வதை சாதாரணமாக பார்க்க முடிகிறது. நடை பாதையின் ஒரு பக்கம் சரணாலயம் மறு பக்கம் கோவில் குளம் ஒன்று உள்ளது.
தஞ்சாவூர், மன்னார்குடி மனிதர்கள் வெகு சுலபமாக சென்று பார்க்க கூடிய வகையில் சரணாலயம் உள்ளது. இந்த குளிர் காலத்தில் நான் பார்க்கும் மூன்றாது பறவைகள் சரணாலயம் வடுவூர் சரணாலயமாகும்.

அடுத்து ரங்கன்திட்டு செல்லவேண்டும்.

-செழியன்

உங்கள் கருத்துகளை  தெரியபடுத்த

lapwing2010@gmail.com 


  

2 comments:

  1. Dear Birder,

    Amazing picture. They say that a picture speaks a thousand words. Looks like you connected with the pain of not seeing the lake full. Sanctuaries are safe places for birds to live in. This also saves water and recharges ground water. These wetlands are important for fresh water. Can a river feed this Sanctuary.

    ReplyDelete
  2. I crossed Vaduvoor Bird Sanctuary last year and enjoyed the beauty of the lake, but not realized the birds of it. Now I have a feeling to visit Vaduvoor to see the birds. Thanks for your information with the list of birds.

    ReplyDelete