Wednesday 9 July 2014

Birds - Humming Bird



விசிலடிக்கும் சிறகுகள்

                - சிதம்பரம் ரவிசந்திரன்
  
          இந்தப் பறவைக்குப் பாடத்தெரியாது ஆனால் இவற்றின் பெயரே பாட்டோடு சம்பத்தப்பட்ட ஒரு வார்த்தையிலேயே அமைந்திருப்பது ஆச்சரியமான விஷயம்தான். அவைதான் ஹம்மிங் பறவை ( Humming Bird ). இந்தப் பறவைகள் இவற்றின் சிறகுகள் ஏற்படுத்தும் விசில் போன்ற ஓசையே இவை பாடுவதைப்போலத் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

அதனால் இதை விசில் என்றும் கூறுவதுண்டு இந்தப் பறவைகள் ஒரு திறன் மிக்க ஹெலிகாப்டரைப் போல பக்கவாட்டிலும், மேலும், கீழும், முன்னும், பின்னும் என்று எல்லா திசைகளிலும் பறக்கக்கூடிய ஆற்றல் வாய்ந்தது ஆகும். இவற்றால் நடுவானில் அசையாமல் அப்படியே நிர்கக்கூட முடியும்.

சுமார் 600 மைல் தூரம்கூட இவை தென் அமெரிக்காவில் இருந்து மெக்ஸிகோ வரை கூட வலசை போக முடியும். நீண்டதுரம்  பறக்கவல்லதால் இவற்றின் கால்கள் வலுவுடையதாக இருப்பதில்லை. இதனால் இவை மரங்களின் மீது தொற்றிக்கொண்டு மட்டும் உட்காரமுடியும். இவற்றின் பல வண்ணத் தோகைகள் பல நிறங்களாலான இறகுகளால் ஏற்படுவதில்லை. இவற்றின் சிறகுகளில் உண்டாவதில்லை. இறகுகளின் மேற்பகுதியில் பிரிசம் போன்று முப்பட்டக செல்லகள் அமைந்துள்ளன. ஒளி இவற்றின்  மீது படும்போது பல வண்ணங்களில் ஒளிர்கிறது. இந்த அமைப்பால் ஆண் பறவை பெண் பறவையுடன் உறவு கொள்கின்றன. இந்த திட்டுகளை வைத்தே இந்தப் பறவைகள் தங்கள் எல்லைக்குள் ஊடுருவும் தேன் குடிக்கும் பூச்சிகளை மிரட்டி விரட்டுகின்றன.

பரப்பதிலேயே தங்கள் சக்தியின் பெரும்பாலான பகுதியை செலவழிக்கும் இந்த ஹம்மிங் பறவைகள் ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர்கள் இடையில் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக ஆற்றலைப் பெறுவதற்காக பழரசங்களை அருந்துவதுபோல இவை தங்கள் நின்டதுரப்பயனத்தின் இடையில் அவ்வப்போது தேன் அருந்துகின்றன .

10% முதல் 15% வரை தங்கள் நேரத்தை உணவு அருந்துவதிலும், 75% முதல் 80% வரை உணவை செரிப்பதிலும் செலவழிக்கின்றன.12% முதல் 25% தேனில்வரை சர்கரையின் அளவு இருக்கும் பூக்களில் மட்டும் இவை தேன் அருந்துகின்றன. தேன் குறைவாக இருக்கும் மலர்களை தவிர்துவிடுகின்றன. மற்றொரு சிறப்பு இவை மகரந்தசேர்க்கை செய்யும் பூக்களில் சுக்ரோசின் அளவு அதிகமாக இருக்கும். ஆனால் பூச்சிகளால் மகரந்தசேர்க்கை நடைபெறும் பூக்களில் பிரக்டோசும், குளுகோசும் அதிகமாக இருக்கும். புரஊதாக்கதிர்களை உள்ளவாங்கிகொள்ளும் மலர்களை இந்த ஹம்மிங் பறவைகளால் மட்டுமே பார்க்கமுடியும். ஏனென்றால் இவைகளால் புரஊதாக்கதிர்களை ஒட்டிய ஒளிக்கதிர்களை பார்க்கமுடியும்.

இது பெரும்பாலான பூச்சிகளின் கண்களுக்குத் தெரிவதில்லை. இதனால் இப்படிப்பட்ட பூச்சிகளில் மற்ற பூச்சிகளால் தேன் எடுக்கப்படாமல் இந்தப் பறவைகள் குடிப்பதற்கு தேன் அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட நிறங்கள் கொண்ட பூக்களையே இவை தேடிச்செல்கின்றன. சிகப்பு , இளம் சிகப்பு , காவி, ஆகிய நிறங்கள் உள்ள பூக்களைய்யே இவை அதிகம் தேடிச்சென்று இவை தேன் குடிக்கின்றன. இவற்றின் நாக்கின் பக்கவாட்டில் தேனைச் சேகரிக்கும் வரிப்பள்ளங்கள் காணப்படுகின்றன. அலகுகள் சுருங்கும்போது இவை தேனை உள்ளே இழுதுக்கொள்கின்றன.

பொதுவாக இவற்றின் அலகுகள் நீண்டு நேராக இருக்கும். ஆனால் சில சிற்றினங்களில் அலகுகள் தேன் இருக்கும் பூக்களுக்கு ஏற்ப வளைந்தோ, அரிவாள் போன்ற அமைப்பிலோ, மேல் நோக்கியோ, சில வகை மீன் பற்கள் போன்று முட்கள் போன்ற அமைப்புடன் அவற்றின் நீண்ட அலகுகளில் அமைந்ததாகவோ காணப்படுகிறது. அலகின் இருபாகங்களும் இறுக்கமாக மூடிக்கொள்ளும் அமைப்பு உடையவை. தேனை எடுக்கும்பொழுது மட்டும் லேசாக அலகைத் திறந்து நாக்கை பூவின் உள்ளே நுழைத்து தேனை உறிஞ்சுகின்றன.
          இவை ஒவ்வொரு நாளும் தங்களுடைய உடல் எடைப்போல இரண்டு மடங்கு தேனைக் குடிக்கின்றன. தேன் மட்டும் குடித்தால் போதுமான அளவுக்கு ஊட்டசத்து கிடைக்காது என்பதால் புரதம், வைட்டமின்கள் போன்ற பிற சத்துகளைப் பெறுவதற்காக சிறிய பூச்சிகளில் , சிலந்திகள் போன்றவற்றையும் உண்கின்றன.

பெண்பறவை ஒரு சமயத்தில் இரண்டு முட்டைகளை இடுகிறது. கூடுகளை பென்பரவைகளே கட்டுகின்றன. மரக்கிளைகள் பிரியும் இடங்களிலோ, இலைகளின் மேலேயோ கிண்ண வடிவத்தில் கூடுகளைக் கட்டுகின்றன. மரத்தில் இருக்கும் சிலந்திகள் வலையை கூடு கட்டப் பயன்படுத்துவதால் முட்டையில் இருக்கும் குஞ்சு பொரிந்து வெளியே வந்து பெரிதாக வளர வளர கூடு விரிந்துகொடுக்கிறது.

மத்தியதரைக்கடலில் இருக்கும் ட்ரினிடாடு & டொபாகோவை ஹம்மிங் பறவைகளின் நாடு என்று கூறுவார்கள். அந்த நாட்டின் ரானுவச்சினத்தில், ஒரு சென்ட் நாணயத்திலும், அவர்களின் தேசிய விமானசேவை நிறுவனமான கரீபியன் எர்லைன்சிலும் ஹம்மிங் பறவைகள் இடம்பெற்றுள்ளன. பல உலக நாடுகள் ஹம்மிங் பரவைக்களுக்காக தபால்த்தளைகளையும் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
 

No comments:

Post a Comment