Thursday 22 May 2014

Bird Man of India - 2



இந்தியாவின் பறவை மனிதன்-2

                                    - சிதம்பரம் ரவிசந்திரன் 

நாம் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் பார்த்த இந்தியாவின் பறவை மனிதன் உலக புகழ் பெற்ற பறவை ஆரய்சியாளாரான டாகடர் .சலீம் அலி தான் அந்த மனிதர் .

நவம்பர் ம் நாளில் மும்பையில் கேத்வாடியில்தான் அந்த பறவை மனிதரின் பிறப்பு நிகழ்ந்தது .தந்தை மொய்சுதின் ,ஜீனத் என்பதுதான் தாய் பெயர் . நான்கு சகோதர்களும் , நான்கு சகோதரிகளும் கொண்ட குடும்பத்தில் வளர விதி சலீமைஅனுமதிக்கவில்லை . அவருக்கு ஒரு வயது இருக்கும்போது தந்தையும் , மூன்று வயதாக இருக்கும்போது தாயும்  மறைந்தார்கள் . 

மாமாவான அம்ருதின் தய்ப்ஜியுடந்தான் அதன் பின் சலீம்முடைய பிற்கால வாழ்கை . விதி சில சமயங்களில் சில மந்திர செயல்களை செய்வது உண்டு ,சலிம்முடைய வாழ்விலும் அவ்வாறே நடந்தது .காரணம் மாமாவுக்கு குழந்தைகள் யாரும் இல்லாமல் இருந்தது .சலீம் உட்பட ஒன்பது சகோதர் சகோதரிகளை தன் சொந்தக் குழந்தைகளைப் போல மாமாவும் ,மாமியும் வளர்த்தார்கள் .மாமா ஒரு வேட்டையாடும் தொழில் புரிபவராக இருந்தார்.நவாப்களுக்காகவும், ராஜாக்களுக்காகவும் அவர் அடர்ந்த காடுகளில்வேட்டையாடினார்.

மூத்த சகோதரனான ஹமித் வேலை பார்த்த காட்டுப்பகுதியில் சலீம்  அவ்வபோது சென்று வந்தார். இயற்கை ஆராய்ச்சிக்கும், பறவை ஆராய்ச்சிக்கும் ஆரம்பம் இந்த பயணங்களில் நிகழ்ந்தது என்றாலும் சலீமை பறவைகள் உலகின் பக்கம் திருப்பிவிட்டது வீட்டில் சமையல்காரனாக இருந்த நாணுதான். அவர் பழைய சாமான்களை வைத்து ஒரு கிளிக்கூடு கட்டித் தந்தார் . அதில் சலீம், தமையனுடைய மகனும் சேர்ந்து பறவைகளை வளர்க்க ஆரம்பித்தார்கள். இப்படிதான் சலீம் அலி பறவைகளை பற்றி ஆராய்ச்சியில் வீட்டில் முத்தல் பாடம் படிக்கத் தொடங்கினார் .

சிறுவனாக இருந்த சலீமை பறவை ஆய்வாளராக மாற்றியது மற்றொரு கதையும் இருபதாக சொல்ல்வதுண்டு . இன்றைய மும்பையில் நெரிசல் மிகுந்த செம்பூர் அன்று வனப்பகுதியாக இருந்தது வசந்தகால விடுமுறையின்போது மாமா குடும்பத்துடன் அங்கே செல்லவார் . ஆடு, மாடுகளுக்காக வைக்கோல் கட்டுகளை உயரத்தில் வைத்து இருப்பார்கள். அது ஒரு அற்புதம் நிறைந்த காட்சியாக இருந்தது சிறுவன் சலீமுக்கு. அதைவிட அதிசயம் சூரியன் அஸ்தமித்து மாலையாகும்போது, அந்தக் கூடுகளில் வந்து தங்கி இன்னிசை பாடும் குருவிகள். துப்பாக்கி சுடுவதில் திறமைசாலியான சலீம் குருவிகளை எப்போது பார்த்தாலும் துப்பாக்கிக்குண்டுகளுக்கு இரையாக்கி வந்தார். அதில் ஒரு குருவி சுட்டவுடன் நேராக வந்து அவர் கால்களைத் தொட்டு உயிருக்காகக் கெஞ்சிவது போல இருந்தது அவருக்கு. அது மிகவும் வித்தியாசமானதாகப் பட்டது சலீமுக்கு. தொண்டையில் ஒரு மஞ்சள் பட்டை சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக மாமாவிடம் போனார் சலீம்.

தனக்கு தெரியாததால் நேச்சுரல் ஹிஸ்ட்டரி சொசைட்டிக்குப் போகுமாறு மாமா சலிமைத் தூண்டினார். பிரிட்டிஷ்காரர்கள் தான் அன்று Natural History Society என்ற அந்த சங்கத்தை நடத்தி வந்தது. தயங்கித் தயங்கி அங்கு சென்ற சலீமை அங்கு கண்ட காட்சிகள் அசரவைத்தது. ஒன்றிரண்டு இல்லை. ஆயிரக்கணக்கில் பறவைகள் உயிரற்ற வடிவத்தில் சிறுவன் சலீம் பார்த்தார். ஆச்சரியப்பட்டார். சங்கத்தின் பொறுப்பில் இருந்த பெர்லார்ட் துரை அங்கு இருந்த எல்லா பறவைகளையும் சலீமுக்கு சுற்றி காட்டினார். கட்டை விரல் மட்டுமே அளவுள்ள Sun Bird முதல் ஒரு மனிதன் அளவுக்கு இருக்கும் கொக்குகள் வரை பாலிஷ் செய்து மெருகேற்றி வைத்திருந்த ஏராளமான பறவை    மாதிரிகளை சலீம் வியப்புடன் கண் கொட்டாமல் பார்த்தார்.

                                                                               - பறவை மீண்டும் வரும் 

No comments:

Post a Comment