Thursday, 1 March 2018

சென்னை நகரத்தில் ஒரு காடு

 


பேருந்து, விமானம், இரயில் இவற்றின் சத்தத்திற்கு நடுவில் ஒரு காடு தன் இயல்பு நிலையில் அதுவும் அமைதியுடன் இருப்பது ஆச்சரியமே. கிண்டி சிறுவர் பூங்கா அனைவரும் அறிந்ததே. ஆனால் அவற்றை ஒட்டி தொடங்கும் காடு பற்றி பெரும்பாலானோர்களுக்கு தெரிந்திருக்க வாய்பில்லை. மான், நரி, இரலை, அலங்கு, எண்ணற்ற உள்ளநாட்டு-வெளிநாட்டு பறவைகள் என்று அனைத்தையும் அதன் வாழ்விடத்தில் பார்ப்பதற்கு ஏற்ற இடன் இந்த சிறு காடு.

Sunday, 18 February 2018

பெரும்பாக்கம்- குளிர்காலத்தின் கடைசி மாதத்தில்



சாம்பல் நாரை 
அதிக பறவைகள் பெரும்பாகத்தில் என்ற செய்தி அங்கு செல்லவேண்டும் என்ற உந்துதலை உருவாக்கியது. இன்று அரவிந்த், மலைநாடன் மற்றும் அவர் மகன், கிஷோர், அமர், வினோத் குமார், நித்யானந்த் மற்றும் அவர் மாணவர்கள், லோகேஷ் பள்ளி மாணவன் என்று ஒரு குழுவாக காலை ஏழு மணியளவில் ஏரியின் பாதையில் நின்றோம். நீர் போல் ஏரி முழுவதும் பறவைகளால் நிரம்பியுள்ளதால் எங்கு இருந்துவேண்டுமென்றாலும் பார்க்க தொடங்கலாம். அதனால்  நின்ற இடத்தில் இருந்தே மடையானை(Pond Heron) வரவேற்றோம்.

Tuesday, 2 January 2018

Round up-2017 : With birds and beyond.....


இந்த வருடம் என்ன செய்தோம் என்று யோசித்ததில் ஓர் அளவுக்குதான் யோசிக்கமுடிந்தது. ஆனால் துல்லியமாக யோசிக்க முடியுமா என்றால் சிரமமே. பறவைகள் பார்த்ததை குறிப்பதற்க்கென்று ஒரு Birding Planner வருட ஆரம்பத்தில் வாங்கி குறித்து கொண்டு வந்தேன். அவற்றை எடுத்து பார்த்ததில் இந்த வருடம் என்ன செய்தோம் என்பது துல்லியமாக தெரிந்துவிட்டது.

பறவைகளை பார்த்து மட்டுமில்லமல் அவற்றை பற்றி நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்துதியது, சிட்டுகுருவி தினத்தின் கொண்டாட்டம்,  சென்னை பறவை பந்தயம்(Chennai Bird Race), ஊர்புறத்து பறவைகள் கணக்கெடுப்பு(GBBC), இயற்கை, பறவை பற்றிய கட்டுரைகள் எழுதியது, நிறைய புதிய பறவை மனிதர்கள் அறிமுகம், புதிய பறவைகளை(Lifer) பார்த்தது, பட்டாம்பூச்சி பார்க்க ஒரு நடை, இயற்கை தொடர்பான புத்தகம் சேகரித்தல் என்று 2017யை பொறுமையாக நடந்து, சில முறை ஓடி  கடந்துள்ளேன்.

Monday, 25 December 2017

10th சென்னை பறவை பந்தயம்



பறவை பந்தயம் என்ற வார்த்தை பறவைகளை பந்தயம் விடுவார்கள் என்ற அளவிலேயே இரண்டு வருடம் முன்பு தெரிந்து இருந்தது. ஆனால் அதற்கு நேர் எதிர் செயல் என்று தெரிந்து பிறகு இந்த ஆண்டு அதில் கலந்துகொள்வது என்ற முடிவால் தயாராகிவிட்டேன்.

Thursday, 14 December 2017

புத்தகம்- வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்......



பறவை புத்தகங்கள் தமிழில் குறைவு என்பது எப்படி உண்மையோ அதேபோல் நிறைய புதியவர்கள் எழுத வந்து கொண்டிருப்பதும் உண்மையே. அப்படி ஒரு புதிய புத்தகத்தை சமிபத்தில் படிக்க நேர்ந்தது.

“வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்” என்ற தலைப்பு, கபாலிடா என்பது போல் உள்ளது. பறவைகளை பார்ப்பது, அவற்றை தெரிந்து கொள்வது, விவாதிப்பது போல், பறவைகளின் வாழிட அழிப்பு அதனால் அவற்றின் எண்ணிக்கை குறைதல் அல்லது முழுவதும் அற்று போதல் போன்றவற்றை  பற்றி புத்தகத்தில் விரிவாக நா.வினோத் குமார் எழுதி உள்ளார். இந்து தமிழ் நாளிதழில் பணிபுரியும் வினோத், உயிர்மூச்சு பகுதியில் எழுதிய கட்டுரைகளை தொகுத்து, புத்தகமாக தந்துள்ளார்.

ஆரம்ப கட்டுரை கான மயில் மற்றும்  புத்தகத்தின் நடுவே ஒரு கானமயில் கட்டுரை உள்ளது. இரண்டு கட்டுரையும் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்று கானமயிலை பற்றி தெரிந்து கொள்ளமுடிகிறது. அதற்கு முழுகாரணம் மனிதர்கள்தான் என்பது இதில் சோகமே. பறவைகளின் வாழிடங்களை அழிக்காதிர்கள் அப்படி அழிக்காமல் இருந்தால் பறவைகளே தன் வாழ்கையை பார்த்துகொள்ளும் என்று அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

Thursday, 30 November 2017

கொட்டிகிடக்கும் பறவைகள்........



புதர்சிட்டு 
விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் காட்டு மைனா, சாதரண மைனா, சிறிது தூரத்தில்  வென்புருவ வாலாட்டி. இவை அனைத்தும் நிலத்தில் இரையை தேடிகொண்டிருந்தது. மறுபுறத்தில் விவசாயி, மாடுகளை கொண்டு நிலத்தை உழுது கொண்டிருந்தார். அவரும், மாடும், பறவைகள் பக்கம் செல்லும்பொழுது அவை நகர்ந்து செல்கிறதே தவிர அங்கிருந்து பறந்து செல்லவில்லை அனைத்தும் மனிதர்கள் அருகில் வாழ பழகி கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது ஏலகிரியில்.

நான்கு கிலோமீட்டர் செல்லவேண்டிய தூரம், பறவைகளை பார்த்து கொண்டே செல்வதற்கு வசதியாக நடந்து செல்வோம் என்று நண்பர் மாசிலாமணியுடன் நடந்தேன். நான்கு கிலோமீட்டர் என்பது இலக்கு இல்லை, போக வேண்டிய தூரம் என்பதால், சென்றோம். என்ன அதிகமாக பறவைகள் இருந்துவிட போகிறது என்ற நினைப்பு ஆரம்பத்தில் வந்தது என்னமோ நிஜம். ஆனால் கொட்டிகிடக்கிறது பறவைகள் ஏலகிரி மலை மேல்.

Friday, 27 October 2017

Tamil Birders Meet- 2017 – Yelagiri


பச்சை சிட்டு 
ஜோலார்பேட்டையில், ஒரு ரிசர்வ் பேங்க் உள்ளது என்று தெரியாமல் இருந்துவிட்டேன். இரயில் நிலையத்தில் அருகில் இருந்த டீ கடையில் அதிகாலை நான்கு நாற்பத்தைந்து மணிக்கு(4.45am) டீ குடித்துவிட்டு, பத்து ரூபாய் காயினை கொடுத்தபொழுது, செல்லாது என்று டீ கடைகாரர் சொல்லிவிட்டார்.

ஒரு கணம் ஆடிபோய்விட்டேன், என்ன அண்ணே அதிகாலையில் இப்படி செல்லாது என்று சொன்னால் என்ன செய்ய முடியும். போனமுறை தமிழ்ப் பறவைகள் சந்திப்புக்கு செல்லும்பொழுதுதான் 1000, 500 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டார்கள், இதை நம்பி ஊரு விட்டு, வேறு ஊருக்கு வந்து விட்டோம் என்ற சொன்னால், அதெல்லாம் இல்லை இந்த ஊரில் யாரும் வாங்கமாட்டார்கள் என்று அழுத்தமாக திரும்ப திரும்ப சொன்னார். வேறு வழி இல்லாமல்  ரூபாய் நோட்டை கொடுத்து நகர்ந்தோம்.

ஏலகிரி மலை மேல் சென்று, அங்கு எந்த ரூபாயும் செல்லாது என்று சொல்லிவிட்டால் என்ற பயம் வேற வந்துவிட்டது. இனி ரூபாய் நோட்டு தொடர்பாக எந்தவித அறிவிப்போம் இந்த இரண்டு நாளில் வந்தால் அதை சரி செய்கிற முழு பொறுப்பும் ஜெகன்நாதன் சார் தான் என்று முடிவு செய்தே, பஸ்க்கு நின்றிருந்தேன் நண்பர் மாசிலாமணியுடன்.

Monday, 16 October 2017

பறவை நோக்குதல்- 13 (Night Watching)

பகலில் மட்டுமே பறவைகள் பார்ப்பது ஆரம்பத்தில் சரி என்றாலும் அதற்கு அடுத்து இரவிலும் பறவைகளை பார்க்க செல்லவேண்டும். இரவில் தூங்கிகொண்டிருக்கும்  பறவையை பார்த்து  என்ன செய்வது? என்று உடனே கேள்வி கேட்பீர்கள். உங்கள் கேள்வி முற்றிலும் இப்பொழுது சரி என்றாலும், கட்டுரை முடிவில் உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்து விடும். பறவை உலகில் ஒரு சில பறவைகளுக்கு இரவு உலகம் என்று ஒன்று உண்டு. அவற்றை பற்றி பார்ப்போம்.

மனிதர்கள், பகலில் உழைத்து-இரவில் தூங்குவது பொதுவான ஒன்று. பறவைகளும் அப்படிதான் என்றாலும் சில பறவைகள் இதில் இருந்து விதிவிலக்கு உண்டு. பகலில் உறங்கி இரவில் இரை தேட கிளம்பும்.

இரவு பறவை என்பது ஒன்று உண்டா? என்றால்

உண்டு.

Saturday, 30 September 2017

பறவை நோக்குதல்- 12 (Feeding Methods)

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பறவைகள் பலவிதமா ? என்றால்

ஆமாம் என்றே சொல்லத் தோன்றுகிறது அவற்றை நுணுக்கமாக அணுகும்பொழுது

நாம் உணவை கீழே அல்லது நாற்காலியில் அமர்ந்து அல்லது சில நேரம் நின்று கொண்டே சாப்பிடுவோம். ஆனால் பறவைகள்? இதென்ன கேள்வி மரத்தில் இருந்துதான் என்ற பதில் சட்டென்று வரும் அவை சரியென்றாலும் பாதியளவு மட்டுமே உண்மை.

பறவை நோக்குதலில் நாம் ஆரம்பத்தில் மேம்போக்காக பார்த்துக்கொண்டே செல்வோம் மாதங்கள் செல்ல செல்ல நமது பறவை பார்த்தலில் நுனுக்கங்களுடன் பார்க்க வேண்டும். அப்படி பறவை பார்க்கும்பொழுது கீழ் இருக்கும் பறவை வகைகளின் பழக்க வழக்கங்களை பற்றி தெரிந்துகொண்டால் உங்கள் பறவை அறிவு வளர்ந்து கொண்டே செல்லும்.

மயில்